Tamil bible Quiz - வேதாகம கதையின் இருப்பிடம் கூறு?

வேதாகம கதையின் இருப்பிடம் கூறு?


வேதாகமத்தில் கூறப்பட்ட கதைகளை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட கேள்வி - பதில் பகுதி இது. கேள்வி கேட்கப்படும் போது யார் முதலில் அந்த கதையின் இருப்பிடம் கூறுகிறார்களோ அவர்கள் தான் வெற்றியாளர்.

1. அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த இராத்திரியிலும் குடை பிடிப்பானாம்!!!அர்த்த இராத்திரியில் குடை பிடித்த அற்ப முட்செடியின் கதையிது!!  யெருபாகாலின் கடைமகன் உரைத்த கதையிது!!!
Answer : நியாயாதிபதிகள்:9: 7 -15

2. உறியிலே வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைந்த கதையிது....!!!! நாத்தான் தாவீதுக்கு சொன்னக் கதையிது....!!!
Answer : II சாமுவேல்:12:1-4

3. அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகருமாம்.....! நியாயாதிபதியை விடாமல் அலட்டி நியாயம் பெற்ற விதவையின் கதையிது!! இயேசுநாதர் சொன்னக் கதையிது!!!!
Answer : லூக்கா :18:1-5

4. ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வருமாம்!!!! பூமியில் சம்பிரமாய் வாழ்ந்த செல்வந்தனின் கதையிது!! இயேசுநாதர் சொன்னக் கதையிது!!!!
Answer : லூக்கா :16: 19-31

5. அறிவே ஆற்றல் என்கிறது மூதாதையர் மொழி. அறிவை ஆற்றலாக்கி தன் பட்டணத்தை விடுவித்த ஏழையின் கதையிது...! ஞானி சொன்ன கதையிது....!
Answer : பிரசங்கி :9: 14-16

6. நுணலும் தன் வாயால் கெடுமாம்....!!! தன் வாயால் தன்னையே உயர்த்தி தாழ்த்தப்பட்ட பரிசேயன் கதையிது!! இயேசுநாதர் சொன்னக் கதையிது!!!!
Answer : லூக்கா:18: 10-14

7. நிலத்தின் தரம் சார்ந்து பலனும் இருக்குமாம்...விதைக்கச் சென்றவன் கதையிது..! இயேசுநாதர் சொன்னக் கதையிது!!!!
Answer : மத்தேயு :13:3-8

8. நெல்லுக்கு பாயும் தண்ணீர் புல்லுக்கும் பாயுமாம்...! கோதுமைக்குள் களை வளரவிட்ட கதையிது...! இயேசுநாதர் சொன்னக் கதையிது!!!!
Answer : மத்தேயு :13:24-30

9. பிறனை மன்னிப்பவனை கடவுள் மன்னிக்கிறாராம். தான் மன்னிப்பு பெற்று பிறனை மன்னிக்காதவன் கதையிது...! இயேசுநாதர் சொன்னக் கதையிது!!!!
Answer : மத்தேயு :18:23-35

10. கெண்டையை போட்டு விராலை இழுத்தானாம். சொத்தை விற்று முத்தைக் கொண்டானாம். ...!  
இயேசுநாதர் சொன்னக் கதையிதாம்...!!
Answer: மத்தேயு :13:45-46

11. சேராத இடத்தில் சேர்ந்தால் துன்பம் வருமாம்...! சேராத இடத்தில் சேர்ந்து துன்பம் அனுபவித்த இளையவன் கதையிது...! இயேசுநாதர் சொன்னக் கதையிது!!!!
Answer : லூக்கா:15:11-32

12. வேலைக்கள்ளிக்கு பிள்ளை மேல் சாக்காம்..!! ராஜா வீட்டு விருந்தை நொண்டிச்சாக்கு சொல்லி தட்டிக்கழித்த விருந்தினரின்கதையிது...! இயேசுநாதர் சொன்னக் கதையிது!!!!
Answer : லூக்கா:14:16-24






Comments

My popular posts

Tamil Bible Connection Game - வேதாகம பெயர்கள்! - PART III

Tamil Bible Connection Game - Bible verses (Part I)

Tamil Bible Quiz - நான் யார்?