Tamil Bible Quiz - வேதாகமத்தில் ஒப்புமைகள் (PART VIII)

வேதாகமத்தில் ஒப்புமைகள் (PART VIII) 

1. அளக்கவும் எண்ணவுங்கூடாத கடற்கரை மணலைப்போலிருப்பது எது?
Answer: இஸ்ரவேல் புத்திரரின் தொகை (ஓசியா 1:10)

2. காலையில் காணும் மேகத்தைப்போலவும், விடியற்காலையில் தோன்றும் பனியைப் போலவும் இருப்பது எது?
Answer: எப்பிராயீம் (ம) யூதாவின் பக்தி (ஓசியா 6:4)

3. குட்டிகளைப் பறிகொடுத்த கரடியைப் போல இருப்பது யார்?
Answer: கர்த்தர் (ஓசியா 13:8)

4. இஸ்ரவேலுக்குப் பனியைப்போலிருப்பது யார்?
Answer : கர்த்தர் (ஓசியா 14:5)

5. சிங்கத்துக்குத் தப்பினவனுக்குப் கரடி எதிர்ப்பட்டதுபோலவும், வீட்டுக்குள்ளே வந்து சுவரின்மேல் தன் கையை வைத்த போது பாம்பு அவனைக் கடித்ததுபோலவும் இருப்பது எது?
Answer: கர்த்தருடைய நாள் (ஆமோஸ் 5:19)

6.  கர்த்தராலே வருகிற பனியைப் போலவும், பூண்டுகள்மேல் வருகிற மழைகளைப்போலவும் இருப்பவர்கள் யார்?
Answer: யாக்கோபிலே மீதியானவர்கள் (மீகா 5:7)

7. சுவறச் செய்யும் கீழ்க்காற்றைப் போலிருப்பது எது?
Answer: கல்தேயரின் முகங்கள் (ஆபகூக் 1:9)

8. புடமிடுகிறவனுடைய அக்கினியைப் போலவும், வண்ணாருடைய சவுக்காரத்தைப் போலவும் இருப்பது யார்?
Answer: கர்த்தர் (மல்கியா 3:2)

9. கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனைப் போலிருப்பவன் யார்?
Answer: இயேசு சொல்லிய  வார்த்தைகளைக் கேட்டு அவைகளின்படி செய்கிறவன் (மத்தேயு 7:24)

10. மணலின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியில்லாத மனுஷனைப் போலிருப்பவன் யார்?
Answer: இயேசு சொல்லிய  வார்த்தைகளைக் கேட்டு அவைகளின்படி செய்யாதவன் (மத்தேயு 7:26)

11. மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போல இருந்தவர்கள் யார்?
Answer: இயேசுவை பின்தொடர்ந்த திரளான ஜனக்கூட்டம் (மத்தேயு 9:36)

12. மின்னல் வானத்தின் ஒரு திசையில் தோன்றி மறுதிசைவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல இருப்பது எது? 
Answer: மனுஷகுமாரனுடைய வருகை (லூக்கா 17:24)

13. வெளியே எறியுண்ட கொடியைப்போல இருப்பவன் யார்?
Answer: இயேசுவில் நிலைத்தி்ராதவன் (யோவான் 15:6)

14. உலகத்தின் குப்பையைப்போலவும், எல்லாரும் துடைத்துப்போடுகிற அழுக்கைப்போலவும் இருந்தது யார்?
Answer: பவுல் (Iகொரிந்தியர் 4:13)

15. சத்தமிடுகிற வெண்கலம் போலவும் ஓசையிடுகிற கைத்தாளம் போலவும் இருப்பது யார்?
Answer: அன்பில்லாதவன் (Iகொரிந்தியர் 13:1)

Comments

My popular posts

Tamil Bible Connection Game - வேதாகம பெயர்கள்! - PART III

Tamil Bible Connection Game - Bible verses (Part I)

Tamil Bible Quiz - நான் யார்?