Tamil Bible Quiz - வேதாகமத்தில் ஒப்புமைகள் (பழைய ஏற்பாடு - PART II)

வேதாகமத்தில் ஒப்புமைகள் (பழைய ஏற்பாடு - PART II) 

1. சிலந்தி பூச்சி வீடு போலிருப்பது எது?
Answer : மாயக்காரனின் நம்பிக்கை (யோபு:8:14)

2. வேகமாய் ஓடுகிற கப்பல் போலிருப்பது எது?
Answer : நம் நாட்கள் (யோபு:9:26)

3. இரையின் மேல் பாய்கிற கழுகு போல இருப்பது எது?
Answer : நம் நாட்கள் ( யோபு:9:26)

4. வெள்ளம் வற்றிச் சுவறிப் போவது போல இருப்பவன் யார்?
Answer : செத்த பின் மனுஷன் (யோபு:14:11)

5. பிஞ்சுகள் உதிர்ந்துப் போகிற திராட்சை செடியைப் போல இருப்பவன் யார்?
Answer : துன்மார்க்கன் (யோபு:15:33)

6. பூக்கள் உதிர்ந்துப் போகிற ஒலிவமரத்தைப் போல இருப்பவன் யார்?
Answer : துன்மார்க்கன் (யோபு:15:33)

7. செடியைப் போல பிடுங்கிப் போடப்பட்டது எது?
Answer : யோபுவின் நம்பிக்கை ( யோபு:19:10)

8. காற்றுமுகத்திலிருக்கிற துரும்பைப் போல இருப்பவர்கள் யார்?
Answer : துன்மார்க்கன் (யோபு:21:18)

9. பெருங்காற்று பறக்கடிக்கிற பதரைப் போல இருப்பவர்கள் யார்?
Answer : துன்மார்க்கன் (யோபு:21:18)

10. புது துருத்திகளைக் கீறப்பண்ணுகிற புது ரசம் போல இருந்தது எது?
Answer : யோபுவின் உள்ளம் (யோபு:32:19)

11. கெட்டியான வெண்கலத்தைப் போல இருப்பது எது?
Answer : பிகெமோத்தின் எலும்பு (யோபு:40:18)

12. இரும்பு கம்பிகளைப் போல இருப்பது எது?
Answer : பிகெமோத்தின் அஸ்திகள் (யோபு:40:18)

13. எந்திரத்தின் அடிக்கல்லைப் போல கெட்டியாக இருப்பது எது?
Answer : லிவியாதானின் நெஞ்சு (யோபு:41:24)

14. இலையுதிராதிருக்கிற மரத்தைப் போல இருக்கிறவன் யார்?
Answer : கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருக்கிற மனுஷன் (சங்கீதம் :1:3)

15. மணவறையிலிருந்துப் புறப்படுகிற மணவாளனைப் போலிருப்பது எது?
Answer : சூரியன் (சங்கீதம் :19:5)

Comments

My popular posts

Tamil Bible Connection Game - வேதாகம பெயர்கள்! - PART III

Tamil Bible Connection Game - Bible verses (Part I)

Tamil Bible Quiz - நான் யார்?