Tamil Bible Quiz - வேதாகமத்தில் ஒப்புமைகள் (PART IX)

வேதாகமத்தில் ஒப்புமைகள் (PART IX) 

1. கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப் போலிருப்பது எது?
Answer: நம் ஜீவன் (யாக்கோபு 4:14)

2. சிதறுண்ட ஆடுகளைப்போலிருந்தது யார்?
Answer: இரட்சிக்கப்படுவதற்கு முன் நாம் (1 பேதுரு 2:25)

3. அக்கினி ஸ்தம்பத்தைப் போலிருப்பது எது?
Answer: வானத்திலிருந்து இறங்கி வந்த பலமூள்ள தூதனின் முகம் (வெளி:10:1)

4. தேனைப் போல மதுரமாயிருந்தது எது?
Answer: தூதனுடைய கையிலிருந்த சிறுபுஸ்தகம் (வெளி:10:10)

5. சுரமண்டலக்காரர் தங்கள் சுரமண்டலங்களை வாசிக்கிற ஓசையைப்போலிருந்தது எது?
Answer: பெருவெள்ள இரைச்சல்போலவும், பலத்த இடிமுழக்கம்போலவும் வானத்திலிருந் உண்டான சத்தம்(வெளிப்படுத்தின விசேஷம் 14:2)

6. செத்தவனுடைய இரத்தம் போலானது எது?
Answer: சமுத்திரம் (வெளிப்படுத்தின விசேஷம் 16:3)

7. தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப் போல இருந்தது எது?
Answer: புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரம் (வெளிப்படுத்தின விசேஷம் 21:2)

8. மிகவும் விலையுயர்ந்த இரத்தினக்கல்லைப்போலவும், பளிங்கினொளியுள்ள வச்சிரக்கல்லைப்போலவும் இருந்தது எது?
Answer: எருசலேமாகிய பரிசுத்த நகரத்தின் பிரகாசம் (வெளிப்படுத்தின விசேஷம் 21:10,11)

9. தெளிவுள்ள பளிங்குபோல இருந்தது எது?
Answer: எருசலேமாகிய பரிசுத்த நகரத்தின் வீதி
(வெளிப்படுத்தின விசேஷம் 21:21)

Comments

My popular posts

Tamil Bible Connection Game - வேதாகம பெயர்கள்! - PART III

Tamil Bible Connection Game - Bible verses (Part I)

Tamil Bible Quiz - நான் யார்?