Tamil Bible Quiz - கேள்வி-பதில் (இருவர்) - PART - II


கேள்வி-பதில் (இருவர்) - PART-II

1. முதிர் வயதிலும் பெலன் குறையாத இருவர்?
Answerமோசே (உபாகமம் :34:7), காலேப் (யோசுவா :14:10,11)

2. இரட்சிப்பு கர்த்தருடையது என்ற இருவர்?

Answer: தாவீது (சங்கீதம் :3:8), யோனா (யோனா:2:9)

3. பழைய ஏற்பாட்டில் மரித்தோரை உயிர்ப்பித்த இருவர்?

Answerஎலியா (Iஇராஜாக்கள்:17:21to23)எலிசா (IIஇராஜாக்கள்:4:32 to36)

4. தன் சந்ததியாருக்கு குஷ்டரோகத்தை சாபமாக பெற்ற இருவர்?

Answer: யோவாப் (IIசாமுவேல்:3:29)கேயாசி (IIஇராஜாக்கள்:5:27)

5. மோசேக்கு எதிர்த்து நின்ற இருவர் ?

Answer: யந்நே, யம்பிரே (IIதீமோத்தேயு:3:8)

6. சாத்தானால் சிட்சிக்கப்பட ஒப்புக்கொடுக்கப்பட்ட இருவர்?

Answer: இமெனே, அலெக்சந்தர் (Iதீமோத்தேயு:1:20)

7. இடிமுக்கங்களுடன் மழை பெய்யப் பண்ணின இருவர் ?

Answer: மோசே (யாத்திராகமம் :9:23), சாமுவேல் (Iசாமுவேல்:12:18)

8. இரட்டைப் பிள்ளைகளைப் பெற்ற இருவர் ?

Answer: ரெபெக்காள் (ஆதியாகமம் :25:24), தாமார் (ஆதியாகமம் :38:27)

9. முதிர்வயதானதினால் கண்கள் மங்கலடைந்து பார்க்கக் கூடாதிருந்த இருவர்?

Answer: இஸ்ரவேல் (ஆதியாகமம் :48:10), அகியா (Iஇராஜாக்கள்:14:4)

10. ஆடுகளுக்குத் தண்ணீர் கொடுக்க உதவிச் செய்த இடத்தில் வாழ்க்கைத் துணையைக் கண்டுப் பிடித்த இருவர்?

Answer: யாக்கோபு (ஆதியாகமம்:29:6to11,29:28), மோசே (யாத்திராகமம் :2:15to21)

11. பாலசிங்கம் என குறிப்பிடப்படும் இருவர்? 

Answer: யூதா (ஆதியாகமம்:49:9), தாண் (உபாகமம் :33:22)

12. ஒருவிசை மாத்திரம் பேசுகிறேன் என தேவனோடு கூறிய இருவர்?

Answer: ஆபிரகாம் (ஆதியாகமம் :18:32), கிதியோன் (நியாயாதிபதிகள்: 6:39)

13. முதல் கணவன் மரித்தப்பின் ராஜாவுக்கு மனைவியான இருவர் ?

Answer: அபிகாயில் (Iசாமுவேல் :25:38 to 42), பத்சேபாள் (IIசாமுவேல் :11: 26,27)

14. வேதாகமத்தில் தங்கள் பிறந்தநாளில், கைதிகளுக்கு மரணதண்டனையை நிறைவேற்றிய இராஜாக்கள் இருவர்?
Answer : பார்வோன் (சுயம்பாகிகளின் தலைவனுக்கு) (ஆதியாகமம் :40:20,22), ஏரோது (யோவான் ஸ்நானனுக்கு) (மத்தேயு :14:6,10,11)








Comments

My popular posts

Tamil Bible Connection Game - வேதாகம பெயர்கள்! - PART III

Tamil Bible Connection Game - Bible verses (Part I)

Tamil Bible Quiz - நான் யார்?