Tamil Bible Quiz - பதிலே பரிசாக....!!! - PART III
பதிலே பரிசாக....!!! - PART III
Ans: மாவு (Iஇராஜாக்கள்-17-16)
2. பாலைவனக்கப்பல் கூட இதற்குள் பிரவேசித்தாலும் தன் ஆஸ்தியில் நம்பிக்கை வைக்கிறவனுக்கு பரலோகநாட்டுக்கான ENTRY அரிதிலும் அரிதாம்..... எதற்குள்?
Ans: ஊசி (மாற்கு-10-25)
3. ராஜாவைக் குறித்து பாசக்கவி எழுதிய கவிஞனின் நாவு விரைவாக எழுதுகிறவனுடைய ------------ம். என்ன அது?
Ans: எழுத்தாணி (பேனா) (சங்கீதம் -45-1)
4. கிறிஸ்துவின் நாமம் தரித்தவர்களுக்கு நீ மனப்பூர்வமாய் -------- கொடுத்தால் கூட பரலோகம் உன்னை நினைவூகூராமல் போகாது..... என்ன அது?
Ans: ஒரு கலசம் தண்ணீர் (மாற்கு:9:41)
5. எஜமானது திராட்சைத்தோட்டத்தில் பணிபுரிய, காலை வந்தாலும் ஒரே கூலி.... மாலை வந்தாலும் ஒரே கூலி... அது என்ன கூலி?
Ans: ஒரு பணம் (மத்தேயு -20-2)
6. மலையின் மேலிருக்கும் பட்டணம் மறைந்திருக்கக் கூடாதாம்... -------ஐக் கொளுத்தி கட்டில் அடியில் வைக்கவும் கூடாதாம். என்ன அது?
Ans: விளக்கு (லூக்கா : 8:16)
7. நியாயத்தீர்ப்பிலே இரக்கம் மேன்மை பாராட்டுமாம்... --------+ல்
தசமபாகம் செலுத்துவதற்கு முன்பு, அன்பு கூர இரக்கம் பாராட்ட மறந்து விடாதே.... எதில்?
Ans: வெந்தயம், சீரகம் (மத்தேயு :23:23)
8. ஆயிரம் பதினாயிரங்களை விட சிறந்த நேசர் என் நேசர்..... வெண்மையும் சிகப்புமானவர் என் நேசர்..... அவர் பள்ளத்தாக்கின் லீலியாம்....சாரோனின் ----------ம். என்ன அது?
Ans: ரோஜாப்பூ (உன்னதப்பாட்டு:2:1)
9. சண்டை சச்சரவுகளுடன் கூடிய Chicken kabab, mutton biriyani ஐ பார்க்கிலும் அன்போடு பரிமாறும் ----------- தான் Super tasty food....
Ans: இலைக்கறி (நீதிமொழிகள் -15-17)
10. கசப்புக்களை நம் வாழ்வில் Happy யாக ஏற்றுக்கொண்டால் மதுரமாக நிச்சயம் மாறும் ஓர் நாள்.... பஸ்காவை ---------டன் புசித்து மதுரமான கானானுக்கு நேராக புறப்பட்டனர் தேவஜனம்..... எதனுடன்?
Ans: கீரை (யாத்திராகமம் -12-8)
Comments
Post a Comment