Tamil Bible Quiz - பதிலே பரிசாக.....! - PART IV
பதிலே பரிசாக.....! -PART IV
1. என்னே ஒரு அழகு! என்னே ஒரு அழகு!!
என் நேச மணவாட்டியே......
உன் கன்னங்கள் கூட வெடித்த --------- போல்
என் கண்களுக்குத் தெரிகிறதே!!!!!
எதைப் போல்?
Ans: மாதளம்பழம் (உன்னதப்பாட்டு:6:7)
2.தேவ சமூகத்துத் தீபங்கள்
எப்பொழுதும் அணையாமல் ஒளிவீச
இடித்துப் பிழியப்பட்ட தெளிவான சுத்தமான ------ஐ
உபயோகிக்க வேண்டுமாம்.... என்ன அது?
Ans: ஒலிவஎண்ணெய் (யாத்திராகமம் :27:20)
3. அப்சலோமிடமிருந்து தப்பித்துக் கொள்ள
கிணற்றுக்குள் இறங்கிய சேவகரை
வீட்டுக்காரி கிணற்றின் மேல் ----------- போட்டுப் பாதுகாத்தாளாம்... என்ன அது?
Ans: பாய் (II சாமுவேல்:17:19)
4. உங்கள் வீட்டு Chicken Masala வில் இருக்கும் நான்....
ஆசரிப்புக்கூடார அபிஷேகத் தைலத்திலும் இருந்தேன்...
பரஸ்திரீயின் படுக்கைக்கும் வாசனைக் கட்டினேன்....
நான் யார்?
Ans: இலவங்கப்பட்டை (யாத்திராகமம் :30:24,
நீதிமொழிகள் :7:17)
5. பரிசுத்த தூபவர்க்கத்தில் சுத்தமான நானிருப்பேன்...
வனாந்திரத்திலிருந்து வருகிற நேசரின் மேலும்
என் வாசனை வீசியது. நான் யார்?
Ans: சாம்பிராணி (யாத்திராகமம் :30:34, உன்னதப்பாட்டு: 3:6)
6. கர்த்தருடைய தூதனானவர் கிதியோனை சந்திக்க வரும்போது எதை மீதியானியரின் கைக்குத் தப்புவிக்க
ஆலைக்குச் சமீபமாய் போரடித்துக் கொண்டிருந்தான்...?
Ans: கோதுமை (நியாதிபதிகள் :6:11)
7. கோடைக்கு ஏற்றக் காயாம்...
எகிப்திலே இலவசமாய் சாப்பிட்டக் காயாம்...
என்னக் காய் அது?
Ans: வெள்ளரிக்காய் (எண்ணாகமம் :11:5)
8. கிரயமில்லாமல் கிலோ கணக்கில் கிடைத்ததே எகிப்தில்... அடுப்படி பக்கம் உட்கார்ந்து உரித்து உரித்து சாப்பிட்டோமே -----------ஐ. இப்போதோ இந்த மன்னா தவிர வேறொன்றும் இல்லையே ..... என்ன அது?
Ans: வெண்காயம், வெள்ளைப்பூண்டு (எண்ணாகமம் :11:5)
9. யோபு தன் பாதங்களை --------ல் கழுவினாராம்....
தேவாதி தேவனின் பாதைகள் ---------ய் பொழிகிறதாம்....
என்ன அது?
Ans: நெய் (யோபு:29:6, சங்கீதம்:65:11)
10. உங்கள் வீட்டுச் சாம்பாரின் அடிப்படைப் பொருளான நான்
தானியேலுக்கும் அவன் நண்பர்களுக்கும் புஷ்டியளித்தேன். நான் யார்?
Ans: பருப்பு (தானியேல்:1:12)
Comments
Post a Comment