Tamil Bible Quiz - பெயரைத் தேடு!

பெயரைத் தேடு!

இந்த கேள்விகளின் அர்த்தத்தில் மட்டுமல்ல.....எழுத்துகளிலேயும் பதில் மறைந்திருக்கும். பதில்கள் இந்த பக்கத்தின் கீழ்ப்பகுதியில் உள்ளது. 

1. வாய் கிடைத்த பொக்கிஷத்துக்கு வாழ்வா சாவா சோதனை? அது யார்?(example )

2. ரோஷம் இல்லாத குள்ளநரிக்கு  நெடுநாளாய் ஏதோ ஒரு ஆசை இருந்து வந்ததாம். அது யார்?

3. செஸ்ராணியின் ஜெட் வேக காய்நகர்த்தலுக்குமுன் Tortoise -ன் வேகம் எம்மாத்திரம். அது யார்?

4. துரு துரு முந்திரிக்கொட்டை ஆசாமி பேசவேண்டிய இடத்தில் தடுமாறி தப்பு செய்ததால் மனங்கசந்து அழவேண்டியதாய் போச்சு. அது யார்?

5. பாடுகளின் பாதையோ....தடுமாறாதே... இரட்டிப்பான வாழ்வுக்குள் புகும் காலம் வெகுதொலைவில் இல்லை. அது யார்?

6. இல்லாத ஆசீர்வாதத்தை கேட்க வேண்டியவரிடம் கேட்காமல் இராமற்போனதென்ன என துணைவனிடம் புலம்பி என்ன பயன்? அது யார்?

7. எரிந்து பிரகாசிக்கும் விளக்காய் இருப்பாயோ உன் வாழ்வில்? அது யார்?

8. பண ஆசைத் தீமையால் மோசம் போகாதே... உண்மையுள்ள மகனே... உத்தம குமாரனே. அது யார்?

9. இடக்கை ஆசீர்வாதம் உன்னை சேர்ந்ததால் உன் தகப்பனின் இளையமகனுக்கு கீழாகிப் போனாயே. அது யார்?

10. பழையவை எல்லாம் மறைந்து புதிதாகும் வாழ்வே சர்வவல்லவர் விரும்பும் வாழ்வு.  அது யார்?

11. கர்த்தாவே சொல்லும் உம்முடைய வார்த்தைக்கு செவிசாய்க்கிறேன். அது யார்?

12. வீணான இச்சை தாறுமாறானது வாழ்வு. அது யார்?

13. பிரதான நண்பராம் என் பரமன் எனக்காக எல்லாம் பார்த்துக்கொள்ளும் போது ஆனந்தத்திற்கு ஏது குறைவு என் வாழ்வில்? நான் யார்?

14. கேடியாக வாழ்ந்தாலும் சந்திக்க வேண்டியவர் வாழ்வில் வந்தால்
மெய்யுலகு உனக்கு சொந்தமாகும். நான் யார்?

15. சகோதரரின் தீய யோசனை சேரவேண்டிய இடத்திற்கு என்னை உரிய பாதுகாப்புடன் கொண்டுச்சேர்த்தது. நான் யார்?

16. மக்களின் வரிப்பணத்தில் செழிப்பான வாழ்வு வாழ்ந்த என்னை தேவாதிதேவனின் வார்த்தை எனும் ஆயுதம் எல்லாம் துறக்கவைத்தது.
நான் யார்?

17. சேற்றுத்தாமரையவள். நல் குணநலன்களின் ரூபவதியவள். அவள் யார்?

18. முழு வேதாகமமும் பெஸ்ட்டாக படித்து முடித்து தடுமாறாமல் எடுத்துரைத்த வல்லவன் இவன். அவன் யார்?

19. வீரம் கொண்ட நெஞ்சோடு எழுந்து பணியாற்று. தடுக்க நினைத்து மிரட்டும் கேவலமான மனிதரை துணிவுடன் எதிர்கொள். நான் யார்?

20. மோக இச்சை லொள்ளு விடவைக்க சாகும்போது கூட திருந்த மனமில்லாதவனாய் அவன். அவன் யார்?

21. தன் நண்பனது இனிய வாழ்வில் தானும் பிரியம் கொண்டவன். தக்க யோசனையால் நண்பன் உயிரை காத்தவன் அவன். அவன் யார்?

22. தாவீதுக்கு நோ பால் போட்டு கிளீன்போல்டு ஆன மாகோன் நாட்டுத் தொழிலதிபர் இவன்...... மகாபாரிக் குடிகாரன் இவன்...... யார் அவன்?

23. அழுகையின் மன்றாட்டினால் ஆண்குழந்தை பெற்றெடுத்தாள்...
ஆண்டவருக்கு அர்ப்பணித்தாள்... அவள் யார்?

24. சர்வவவல்லவர் ஈந்த அழகிய குபேர வாழ்வு.... அதனை..... கீழ்ப்படியாமை தலைக்கேற நொடியில் இழந்தான்....தன் பட்டயத்தில் தானே மடிந்தான்.... அவன் யார்?

25. சாகப்போகும் எனக்கு இது என்னத்திற்கு என அலட்சியம் செய்து உத்தம பங்கை இழந்தவனவன்... ஏதோமியனின் மூதாதையனவன். அவன் யார்?




பதில்கள்:

1. ஈசாக்கு (ஆதியாகமம் -22- 1 to 18)
2. ஏரோது(லூக்கா-13-31to33,லூக்கா-23-8)
3. எஸ்தர் (எஸ்தர் 5,6,7)
4. பேதுரு (லூக்கா-22-55to62)
5. யோபு ( யோபு 1,2, 42)
6. ராகேல் (ஆதியாகமம் -30-1,2)
7. யோவான் (யோவான்-5-33to35)
8. தீமோத்தேயு(Iதீமோத்தேயு-1-2, 6- 10,11)
9. மனாசே (ஆதியாகமம்-48-8to20)
10. பவுல் (எ) சவுல் (IIகொரிந்தியர் -5-17)
11. சாமுவேல் (I சாமுவேல்I-3-9,10)
12. தாவீது (IIசாமுவேல்-11,12,13)
13. ஆபிரகாம் (ஆதியாகமம்-17,18)
14. சகேயு (லூக்கா-19-1to10)
15. யோசேப்பு (ஆதியாகமம்-37,39)
16. மத்தேயு ( மத்தேயு-9-9)
17. ரூத் ( ரூத்-1-14to18,2-11,3-10,11)
18. எஸ்றா(எஸ்றா-7-12,நெகே-8-1to8)
19. நெகேமியா( நெகேமியா-2-17to20)
20. சாலொமோன்Iஇராஜாக்கள்-11)
21. யோனத்தான் (Iசாமுவேல்-18,20)
22. நாபால் (Iசாமுவேல்-25-2 to 38)
23. அன்னாள் (Iசாமுவேல்-1)
24. சவுல் (Iசாமுவேல்-15,31)
25. ஏசா (ஆதியாகமம்-25-29to34)

Comments

My popular posts

Tamil Bible Connection Game - வேதாகம பெயர்கள்! - PART III

Tamil Bible Connection Game - Bible verses (Part I)

Tamil Bible Quiz - நான் யார்?