Tamil Bible Quiz - அடைமொழிக்குரியவர் யார்?
அடைமொழிக்குரியவர் யார்?
1. உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கும் தேவ ஆட்டுக்குட்டி?
Ans: இயேசு கிறிஸ்து(யோவான்:1:29)
2. கபடற்ற உத்தம இஸ்ரவேலன்?
Ans: நாத்தான்வேல் ( யோவான்:1:47)
3. நசரேயருடைய மதபேதத்துக்கு முதலாளி?
Ans: பவுல் (அப்போஸ்தலர்:24:5)
4. கொள்ளைநோய்?
Ans: பவுல் (அப்போஸ்தலர்:24:5)
5. நாலாயிரம் கொலைபாதகரை வனாந்திரத்திற்கு கொண்டுப் போன எகிப்தியன்?
Ans: பவுல் (அப்போஸ்தலர்:21:38)
6. வாயாடி?
Ans: பவுல் (அப்போஸ்தலர்:17:18)
7. பாலசிங்கம்?
Ans: யூதா (ஆதியாகமம்:49:9) தாண் (உபாகமம் :33:22)
8. இரண்டு பொதியின் நடுவே படுத்துக் கொண்டிருக்கிற பலத்த கழுதை?
Ans: இசக்கார் (ஆதியாகமம் :49:14)
9. விடுதலை பெற்றப் பெண்மான்?
Ans: நப்தலி (ஆதியாகமம்:49:21)
10. பீறுகிற ஓநாய்?
Ans: பென்யமீன் (ஆதியாகமம் :49:27)
11. திருப்பிப் போடாத அப்பம்?
Ans: எப்பிராயீம் (ஓசியா:7:8)
12. தாறுமாறாய் ஓடுகிற வேகமான பெண்ணொட்டகம்?
Ans: இஸ்ரவேல் (எரேமியா :2:23)
13. திவ்விய வாசகன்?
Ans: யோவான் (வெளிப்படுத்தல் 1 (Intro)
14. பிரியமான புருஷன்?
Ans: தானியேல் (தானியேல்:10:11)
15. கூலிக்கு வாங்கின சவரகன் கத்தி?
Ans: அசீரியராஜா (ஏசாயா:7:20)
16. புகைகிற கொள்ளிக்கட்டைகள்?
Ans: ரேத்சீன், ரெமலியா (ஏசாயா:7:6)
17. எரிந்து பிரகாசிக்கிற விளக்கு?
Ans: யோவான் ( யோவான்:5:35)
18. தேவனுடைய சிநேகிதன்?
Ans: ஆபிரகாம் (யாக்கோபு:2:23)
19. அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளி?
Ans: பாபிலோன் ராஜா (ஏசாயா:13:12)
20. கனி தரும் செடி?
Ans: யோசேப்பு (ஆதியாகமம் :49:22)
21. இடிமுழக்க மக்கள்(பொவனெர்கேஸ்)?
Ans: யாக்கோபு, யோவான் (மாற்கு:3:17)
22. பலனற்ற திராட்சைச் செடி?
Ans: இஸ்ரவேல் (ஓசியா:10:1)
23. நெரிந்த நாணல்கோல்
Ans: எகிப்து (ஏசாயா:36:6)
24. இருப்புக்காளவாய்?
Ans:எகிப்து (11:4)
25. விசுவாசத்தில் உத்தமக் குமாரன்?
Ans: தீமோத்தேயு (Iதீமோத்தேயு:1:2)
25. விசுவாசத்தில் உத்தமக் குமாரன்?
Ans: தீமோத்தேயு (Iதீமோத்தேயு:1:2)
Very deep answers
ReplyDelete