Tamil Bible Quiz - கேள்வி-பதில் (இருவர்) - PART - I

கேள்வி-பதில் (இருவர்) - PART-I


1. உப்பரிகையின் மேல் நின்ற இருவர்?

Answer: தாவீது (IIசாமுவேல்:11:2) , இயேசு (மத்தேயு :4:5)

2. தாகமாயிருக்கிறேன் என்ற இருவர்?

Answer: சிசெரா (நியாயாதிபதி:4:19), இயேசு (யோவான்:19:28)

3. ஸ்திரிகளுக்குள் ஆசீர்வதிக்கப்பட்ட இருவர்?

Answer: யாகேல் (நியாயாதிபதி:5:24), மரியாள் (லூக்கா:1:28)

4. கழுகுகளைப் பார்க்கிலும் வேகமும், சிங்கங்களைப்பார்க்கிலும் பலமும் உள்ள இருவர்?

Answer: சவுல், யோனத்தான் (IIசாமுவேல்:1:23)

5. மகா ரூபவதியான இருவர்?

Answer: ரெபெக்காள் (ஆதியாகமம் :24:16), வஸ்தி (எஸ்தர் :1:10)

6. வேதத்தில் சிவந்த மேனி (நிறம்) எனக் குறிப்பிடப்படும் இருவர்?

Answer: ஏசா (ஆதியாகமம் :25:25), தாவீது (Iசாமுவேல்:16:12)

7. கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியாததினால் சிங்கங்களால் கொன்றுபோடப்பட்ட இருவர்?

Answer: யெரொபெயாமுக்குத் தீர்க்கதரிசனம் சொன்ன தேவனுடைய       மனுஷன் (Iஇராஜா:13:1,24,26), தீர்க்கதரிசிகளின் புத்திரரில் ஒருவனின் தோழன் (Iஇராஜா:20:35,36)

8. தண்ணீரில்லாத குழியிலே (உளை) உயிருடன் தூக்கிப் போடப்பட்ட இருவர்?

Answer: யோசேப்பு (ஆதியாகமம் :37:24),எரேமியா (எரேமியா :38:6)

9. குழியிலே தூக்கிப் போடப்பட்ட இருவர்?

Answer: யோசேப்பு (ஆதியாகமம் :37:24), அப்சலோம் (IIசாமுவேல்:18:17)

10. தங்கள் மனைவிகளை சகோதரி என்று சொன்ன இருவர்?

Answer: ஆபிரகாம் (ஆதியாகமம் :12:13, 20:2), ஈசாக்கு (ஆதியாகமம் :26:7)

11. இஸ்ரவேல் வீட்டைக் கட்டுவித்த இருவர்?

Answer: ராகேல், லேயாள் (ரூத்:4:11)

12. உங்களுக்கு சமாதானம் பெருகக்கடவது என எழுதின இராஜாக்கள் இருவர்?

Answer: நேபுகாத்நேச்சார் (தானியேல்:4:1), தரியு (தானியேல்:6:25)

13.  முகம் சூரியனைப் போல் இருந்த (பிரகாசித்த) இருவர்?

Answer: இயேசு (மத்தேயு:17:2), பலமுள்ள தூதன் (வெளி:10:1)

14. முதிர்வயதிலே குழந்தை பெற்ற இருவர்?

Answer: சாராள் (ஆதியாகமம் :21:2,24:36), எலிசபெத் (லூக்கா:1:36)

15. முதிர்வயதிலே கண்கள் இருளடைந்திருந்த இருவர்?

Answer: ஈசாக்கு (ஆதியாகமம் :27:1), ஏலி (Iசாமுவேல்:4:15)

Comments

  1. கைய்யில் குடியிருந்த தேசம் எது?

    ReplyDelete
  2. Very good quiz, but we need more please send my email 117thangam@gmail.com, thank you

    ReplyDelete

Post a Comment

My popular posts

Tamil Bible Connection Game - வேதாகம பெயர்கள்! - PART III

Tamil Bible Connection Game - Bible verses (Part I)

Tamil Bible Quiz - நான் யார்?