Tamil Bible Quiz - பதிலே பரிசாக.....! - PART II
பதிலே பரிசாக.....! - PART II
உடைந்துப் போன என்னை
மீண்டும் உருவாக்கினார் அவர் சித்தம் போல். நான் யார்?
Ans: மண்பாண்டம் (எரேமியா:18-2 To 4)
2. பூட்டிய வீட்டில் திடீர் காட்சியளிக்கும் மகிபனைக் கண்டு ஆவியைக் காண்பதாக நினைத்து நடுங்குகிறது சீடரின் கூட்டம்....... அவர்களிடம் தேனுடன் இதையும் சேர்த்து வாங்கிச் சாப்பிட்டு அவர்கள் சந்தேகத்தைத் தீர்த்தார் என் மீட்பர். அது என்ன?
Ans: பொரித்தமீன் (லூக்கா-24-36 to 43)
3. இது என்ன? இஸ்ரவேலரின் வியப்பொலியே பெயராக மாறிப்போன வானத்து தானியத்தின் ருசி தேன் சேர்த்த என்னைப்போல் இருந்ததாம்......!! நான் யார்?
Ans: பணியாரம் (யாத்திராகமம் -16-31)
4. தாய்ப்பாலை விட சுத்தமான பால் நான்.... தெளி தேனை விட மதுரமானவனும் நான்....... பசும்பொன்னிலும் விரும்பப்படத்தக்கவன் நான்..... நான் யார்?
Ans: பரிசுத்த வேதாகமம் (சங்கீதம் :19:10, Iபேதுரு-2-3)
5. மிலாற்றினால் அடிக்கப்படுபவன் நான்..... மாயக்காரர் செலுத்தும் காணிக்கையிலும் நானிருப்பேன்..... நான் யார்?
Ans: சீரகம் (ஏசாயா-28-27, மத்தேயு -23-23)
6.கோபத்தைக் கிண்டினால் சண்டை வரும்..... மூக்கை பிசைந்தால் இரத்தம் வரும்.....பாலை கடைந்தால் நான் வருவேன்.....நன்மை தீமை அறியும் வயது மட்டும் என்னை சாப்பிட்டாராம் இயேசுநாதர்..... நான் யார்?
Ans: வெண்ணெய் (நீதிமொழிகள் -30-33, ஏசாயா-7-15)
7. ஆவிக்குரிய வாழ்வில் வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு Dr. Paul பரிந்துரைக்கும் உணவு எது?
Ans: பால் (எபிரேயர்:5:12)
18. மாராவின் கசந்துபோன தண்ணீரால் கசங்கிப்போன இஸ்ரவேலருக்கு ஏலீமில் கிடைத்ததாம் சிங்கம் போல Strength. அப்படி என்னது தான் சாப்பிட்டனர் ஏலீமில்?
Ans: பேரீச்சம்பழம் (யாத்திராகமம் :15:27)
9. மனிதனுடைய காயங்களைக் கட்டுவதோடு மட்டுமல்லாமல், மனிதனுடைய இருதயத்தைக் கூட மகிழ்ச்சியாக்குமாம் இதன் சாறு. எது அது?
Ans: திராட்சைப்பழம் (லூக்கா-10-34, சங்கீதம் -104-15)
10. புசித்துக் குடித்துத் திருப்தியாக இருப்பதற்கு மட்டும் ஜீவாதிபதியைத் தேடாதே.... ஜீவனுள்ள ----------- கிய அவரைத் தேடு.... நீ என்றென்றைக்கும் பிழைப்பாய்.
Ans: அப்பம் (bread) (யோவான்-6-51)
Comments
Post a Comment