Tamil Christian Article - வேதாகமம் கூறும் வரையறைகள் (Definitions)

வேதாகமம் கூறும் வரையறைகள் (Definitions)

1. ராஜரிக பிரமாணம்:
உன்னிடத்தில் நீ அன்புகூருகிறதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக. (யாக்கோபு 2:8)

2. மாசில்லாத சுத்தமான பக்தி:
திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்தில் அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைபடாதபடிக்கு காத்துக்கொள்ளுதலும். (யாக்கோபு :1:27)

3. அழியாத அலங்கரிப்பு: 
சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கும் குணம். (Iபேதுரு:3:4)

4. புத்தியுள்ள ஆராதனை:
சரீரங்களை பரிசுத்தமும், தேவனுக்கு பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுத்தல். (ரோமர்:12:1)

5. வாக்குத்தத்தமுள்ள முதலாம் கற்பனை:
உனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும், பூமியிலே உன் வாழ்நாள் நீடித்திருப்பதற்கும் உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக. (எபேசியர் 6:3)

6. சமநிலை பிராமணம்:
மிகுதியாய் சேர்த்தவனுக்கு அதிகமானதுமில்லை, கொஞ்சமாய் சேர்த்தவனுக்குக் குறைவானதுமில்லை. (IIகொரிந்தியர் :8:13,14)

7. நியாயப்பிரமாணங்களும், தீர்க்கதரிசனங்களும்:
மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். (மத்தேயு 7:12)

8. கற்பனையின் பொருள்:
சுத்தமான இருதயத்திலும், நல்மனச்சாட்சியிலும் பிறக்கும் அன்பு. (Iதீமோத்தேயு :1:5)

9. தேவன் அருளிய அப்பம்:
வானத்திலிருந்திறங்கி, உலகத்துக்கு ஜீவனைக் கொடுக்கிற அப்பம். (யோவான் :6:33)

10. காரியத்தின் கடைத்தொகை:
தேவனுக்கு பயந்து அவர் கற்பனைகளை கைக்கொள்ளுதல். (பிரசங்கி :12:13)




Comments

My popular posts

Tamil Bible Connection Game - வேதாகம பெயர்கள்! - PART III

Tamil Bible Connection Game - Bible verses (Part I)

Tamil Bible Quiz - நான் யார்?