Tamil Bible Connection Game - Bible Verses Part II
Tamil Bible Connection Game - Bible Verses Part II
1.
Answer : மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்குவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல, மனுஷகுமாரனுடைய வருகையும் இருக்கும்.
(மத்தேயு 24:27)
2.
Answer :கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்?
(மத்தேயு 6:27)
3.
Answer : கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும், தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள், தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்.
(மத்தேயு 7:7)
4.
Answer : நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள், உப்பானது சாரமற்றுப்போனால், எதினால் சாரமாக்கப்படும்? வெளியே கொட்டப்படுவதற்கும், மனுஷரால் மிதிக்கப்படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவாது.
(மத்தேயு 5:13)
5.
Answer : இப்பொழுதே கோடரியானது மரங்களின் வேர் அருகே வைத்திருக்கிறது, ஆகையால், நல்ல கனிகொடாதமரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும்.
(மத்தேயு 3:10)
6.
Answer : கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது, உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருக்கும்.
(மத்தேயு 6:22)
7.
Answer : ஒருவனும் விளக்கைக் கொளுத்தி, அதை ஒரு பாத்திரத்தினாலே மூடவுமாட்டான், கட்டிலின்கீழே வைக்கவுமாட்டான், உள்ளே பிரவேசிக்கிறவர்கள் அதின் வெளிச்சத்தைக் காணும்படிக்கு அதை விளக்குத்தண்டின்மேல் வைப்பான்.
(லூக்கா 8:16)
8.
Answer : பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடாதேயுங்கள், உங்கள் முத்துகளைப் பன்றிகள்முன் போடாதேயுங்கள், போட்டால் தங்கள் கால்களால் அவைகளை மிதித்து, திரும்பிக்கொண்டு உங்களைப் பீறிப்போடும்.
(மத்தேயு 7:6)
9.
Answer : பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவையுங்கள், அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை, அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை.
(மத்தேயு 6:20)
10.
Answer : புது திராட்சரசத்தைப் பழந்துருத்திகளில் வார்த்துவைக்கிறதும் இல்லை, வார்த்துவைத்தால், துருத்திகள் கிழிந்துபோம், இரசமும் சிந்திப்போம், துருத்திகளும் கெட்டுப்போம், புது ரசத்தைப் புது துருத்திகளில் வார்த்துவைப்பார்கள், அப்பொழுது இரண்டும் பத்திரப்பட்டிருக்கும் என்றார்.
மத்தேயு 9:17
Comments
Post a Comment