Tamil Bible Quiz - உரைக்கப்பட்டது/ சொல்லப்பட்டது எங்கே?
உரைக்கப்பட்டது/ சொல்லப்பட்டது எங்கே?
இந்த பகுதியில் புதிய ஏற்பாட்டிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். பதிலளிப்பவர் அந்த வசனம் பழைய ஏற்பாட்டில் எங்கு கூறப்பட்டுள்ளது எனக் கூறவேண்டும்.
1. கொலை செய்யாதிருப்பாயாக என்பதும், கொலைசெய்கிறவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான் என்பதும், பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். (மத்தேயு 5:21)
Answer : யாத்திராகமம் 20:13
2. தன் மனைவியைத் தள்ளிவிடுகிற எவனும், தள்ளுதற்சீட்டை அவளுக்குக் கொடுக்கக்கடவன் என்று உரைக்கப்பட்டது. (மத்தேயு 5:31)
Answer : உபாகமம் 24:1
3. நீங்கள் என்னுடைய ஜனங்களல்லவென்று அவர்களுக்குச் சொல்லப்பட்ட இடத்திலே அவர்கள் ஜீவனுள்ள தேவனுடைய பிள்ளைகள் என்னப்படுவார்கள். என்று ஓசியாவின் தீர்க்கதரிசனத்தில் சொல்லியிருக்கிறது (ரோமர் 9:26)
Answer: ஓசியா : 1:10

4. கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்று, உரைக்கப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். (மத்தேயு 5:38)
Answer : யாத்திராகமம் 21:24
5. என் வாயை உவமைகளினால் திறப்பேன், உலகத்தோற்றமுதல் மறைபொருளானவைகளை வெளிப்படுத்துவேன் என்று தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. (மத்தேயு 13:35)
Answer : சங்கீதம் 78:2
6. மேலும் மரித்தோர் உயிர்த்தெழுதலைப்பற்றி: நான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாயிருக்கிறேன் என்று தேவனால் உங்களுக்கு உரைக்கப்பட்டிருக்கிறதை நீங்கள் வாசிக்கவில்லையா? (மத்தேயு 22:31)
Answer : யாத்திராகமம் 3:6

7. ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும் என்று அவனோடே சொல்லப்பட்டிருந்ததே. இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்களைப் பெற்றவன், மரித்தோரிலிருந்துமெழுப்பத் தேவன் வல்லவராயிருக்கிறாரென்றெண்ணி,
(எபிரேயர் 11:18)
Answer: ஆதியாகமம் 21:12
8. மூத்தவன் இளையவனுக்கு ஊழியஞ்செய்வான் என்று அவளுடனே சொல்லப்பட்டது.
(ரோமர் 9:12)
Answer : ஆதியாகமம் 25:23
9. அப்படியே, யாக்கோபைச் சிநேகித்து, ஏசாவை வெறுத்தேன் என்றும் எழுதியிருக்கிறது.
(ரோமர் 9:13)
Answer: மல்கியா 1:2,3
10. மேலும் என்னுடைய வல்லமையை உன்னிடத்தில் காண்பிக்கும்படியாகவும், என்னுடைய நாமம் பூமியில் எங்கும் பிரஸ்தாபமாகும்படியாகவும், உன்னை நிலைநிறுத்தினேன் என்று பார்வோனுடனே சொன்னதாக வேதத்தில் சொல்லியிருக்கிறது.
(ரோமர் 9:17)
Answer: யாத்திராகமம் 9:16
Comments
Post a Comment