Tamil Bible Quiz - வேதாகமத்தில் ஒப்புமைகள் (PART X)

வேதாகமத்தில் ஒப்புமைகள் - செடி, கொடி, மரங்களுடன் மனிதர்கள்


1. பிஞ்சுகள் உதிர்ந்து போகிற திராட்சை செடியைப் போலிருப்பவன் யார்?
Answer : துன்மார்க்கன் (யோபு:15:20,33)

2. பூக்கள் உதிர்ந்து போகிற ஒலிவமரத்தைப் போலிருப்பவன் யார்?
Answer : துன்மார்க்கன் (யோபு:15:20,33)

3. இலையுதிராதிருக்கிற மரத்தைப் போலிருப்பவன் யார்?
Answer : கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருக்கிற மனுஷன் (சங்கீதம் :1:2,3)

4. தனக்கேற்ற நிலத்தில் முளைத்திருக்கிற பச்சை மரத்தைப் போலிருந்தவன் யார்?
Answer : கொடிய பலவந்தனான ஒரு துன்மார்க்கன் (சங்கீதம் :37:35)

5. தேவனுடைய ஆலயத்தில் பச்சையான ஒலிவமரத்தை போலிருந்தது யார்?
Answer : தாவீது (சங்கீதம் :52:8)

6. வீட்டைச் சுற்றிலும் கனி தரும் திராட்சை கொடியைப் போலிருப்பவள் யார்?
Answer : கர்த்தருக்கு பயந்து நடக்கிறவனின் மனைவி (சங்கீதம் :128:3)

7. பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப் போலிருப்பவர்கள் யார்?
Answer : கர்த்தருக்கு பயந்து நடக்கிறவனின் பிள்ளைகள் (சங்கீதம் :128:3)

8. காட்டுமரங்களுக்குள்ளே கிச்சிலி மரம் போலிருப்பவர் யார்?
Answer : குமாரருக்குள்ளே நேசர் (உன்னதப்பாட்டு :2:3)

9. இலையுதிர்ந்த கர்வாலிமரம் போல இருப்பவர்கள் யார்?
Answer : கர்த்தரை விட்டு விலகுகிறவர்கள் (ஏசாயா :1:28,30)

10. அந்தர வெளியில் கறளையாய் போன செடியைப் போலிருப்பவன் யார்?
Answer : கர்த்தரை விட்டு விலகுகிற இருதயமுள்ள மனுஷன் (எரேமியா 17:5)

11. மழைத்தாழ்ச்சியான வருஷத்திலும் தப்பாமல் கனிகொடுக்கிற மரத்தைப்போலிருப்பவன் யார்?
Answer: கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் (எரேமியா 17:7,8)

12. கேதுரு விருட்சத்தைப் போலிருந்தவன் யார்?
Answer: அசீரியன் (எசேக்கியேல் :31:3)

13. கேதுருமரங்களைப்போல் உயரமும், கர்வாலி மரங்களைப்போல் வைரமுமாயிருந்தது யார்?
Answer: எமோரியன் (ஆமோஸ் 2:9)

14. காட்டொலிவமரம் யார்?
Answer : புறஜாதியார் (ரோமர்:11:17)

15. இலையுதிர்ந்து கனியற்று இரண்டுதரஞ் செத்து வேரற்றுப்போன மரங்களைப் போலிருப்பது யார்?
Answer: ஒன்றான ஆண்டவராகிய தேவனையும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவையும் மறுதலிக்கிற பக்கவழியாய் நுழைந்த பக்தியற்றவர்கள் சிலர் (யூதா 1:4,12)

16. பூலோகத்தின் ஆண்டவருக்குமுன்பாக நிற்கிற இரண்டு ஒலிவமரங்கள் யார்?
Answer : இரண்டு சாட்சிகள் (வெளிப்படுத்தின விசேஷம் 11:4)

17. நீர் ஊற்றண்டையிலுள்ள கனிதரும் செடி யார்?
Answer: யோசேப்பு (ஆதியாகமம் 49:22)

18. புல்லின் நடுவே நீர்க்கால்களின் ஓரத்திலுள்ள அலரிச்செடிகளைப்போல இருப்பவர்கள் யார்?
Answer: யாக்கோபின் சந்ததி (ஏசாயா 44:4)

19. பலனற்ற திராட்சை செடி யார்?
Answer : இஸ்ரவேல் (ஓசியா :10:1)

20. மெய்யான திராட்சை செடி யார்?
Answer : இயேசு (யோவான் :15:1)

Comments

My popular posts

Tamil Bible Connection Game - வேதாகம பெயர்கள்! - PART III

Tamil Bible Connection Game - Bible verses (Part I)

Tamil Bible Quiz - நான் யார்?