Tamil Bible Quiz - அர்த்தம் சொல்லு!!!

அர்த்தம் சொல்லு!!!

இந்த பகுதியில் கேள்வி கேட்பவர் வேதாகமத்தில் வரும் வார்த்தைகளை கேள்விகளாக கேட்பார். யார் முதலில் அதன் அர்த்தத்தை (Meaning) பதிலாக கூறுகிறார்களோ அவர்களே வெற்றியாளர்.

1. கொல்கொதா
Answer : கபாலஸ்தலம் (மத்தேயு :27:33)

2. பொவனெர்கேஸ்
Answer : இடிமுழக்க மக்கள் (மாற்கு:3:17)

3. அக்கெல்தமா
Answer : இரத்தநிலம் (அப்போஸ்தலர்:1:19)

4. பர்னபா
Answer : ஆறுதலின் மகன் (அப்போஸ்தலர்:4:36)

5. தபீத்தாள்
Answer : தொற்காள் (அப்போஸ்தலர்:9:36)

6. எலிமா
Answer : மாயவித்தைக்காரன் (அப்போஸ்தலர்:13:8)

7. மெனே
Answer : தேவன் உன் ராஜ்யத்தை மட்டிட்டு, அதற்கு முடிவுண்டாக்கினார். (தானியேல்:5:26)

8. தெக்கேல்
Answer: நீ தராசிலே நிறுக்கப்பட்டு குறையக் காணப்பட்டாய். (தானியேல்:5:27)

9. பெரேஸ்
Answer : உன் ராஜ்யம் பிரிக்கப்பட்டு, மேதியருக்கும் பெர்சியருக்கும் கொடுக்கப்பட்டது. (தானியேல்:5:28)

10. இம்மானுவேல்
Answer: தேவன் நம்மோடிருக்கிறார். (மத்தேயு :1:23)

11. ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி
Answer: என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர். (மத்தேயு :27:46)

12. தலித்தாகூமி
Answer: சிறுபெண்ணே எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன். (மாற்கு:5:41)

13. எப்பத்தா
Answer: திறக்கப்படுவாயாக. (மாற்கு:7:34)

14. ரபீ/ரபூனி
Answer: போதகரே (யோவான் :1:38,யோவான்:20:16 )

15. மேசியா
Answer: கிறிஸ்து (யோவான்:1:41)

16. கேபா
Answer: பேதுரு (யோவான்:1:42)

17. ஸீலோவாம்
Answer: அனுப்பப்பட்டவன் (யோவான்:9:7)

18. கலயெத்
Answer: இந்தக் குவியல் இன்று எனக்கும் உனக்கும் சாட்சி (ஆதியாகமம் :31:48)

19. மக்னாயீம்
Answer: தேவனுடைய சேனை (ஆதியாகமம் :32:2)

20. யேகோவாயீரே
Answer: கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக் கொள்ளப்படும். (ஆதியாகமம் :22:14)




Comments

  1. மிஸ்பா பெயர் உனக்கும் எனக்கும் சர்ச்

    ReplyDelete
  2. நுகம் என்பதின் அர்த்தம் என்ன

    ReplyDelete

Post a Comment

My popular posts

Tamil Bible Connection Game - வேதாகம பெயர்கள்! - PART III

Tamil Bible Connection Game - Bible verses (Part I)

Tamil Bible Quiz - நான் யார்?