Tamil Bible Quiz - இரண்டும் ஒன்று!

Tamil Bible Quiz - இரண்டும் ஒன்று! 


1. வேதாகமத்தில் இயேசுநாதரின் மூதாதையர் ஒருவர் பெயரும், ஒரு மரத்தின் பெயரும் ஒன்று. அது என்ன?
Answer: அத்தி (லூக்கா :3:28, உபாகமம் :8:8)

2. வேதாகமத்தில் ஒரு தீர்க்கதரிசினியின் பெயரும், ஒரு தீர்க்கதரிசியின் தாயின் பெயரும் ஒன்று. அது என்ன?
Answer : அன்னாள் (லூக்கா :2:36, Iசாமுவேல் :1:20)

3. வேதாகமத்தில் ஒட்டகங்களுக்கு தண்ணீர் வார்த்தவரின் தகப்பன் பெயரும், சிறிய தீர்க்கதரிசிகளில் ஒருவரின் தகப்பன் பெயரும் ஒன்று? அது என்ன?
Answer : பெத்துவேல் (ஆதியாகமம் :24:15, யோவேல் :1:1)

4.  வேதாகமத்தில் ஒட்டகங்களுக்கு தண்ணீர் வார்த்தவரின் தாதியின் பெயரும், இஸ்ரவேலை நியாயம் விசாரித்த தீர்க்கதரிசினி ஒருவரின் பெயரும் ஒன்று. அது என்ன?
Answer : தெபொராள் (ஆதியாகமம் :35:8, நியாயாதிபதிகள்:4:4)

5. ஆபிரகாமின் வீட்டு விசாரணைக்கர்த்தனின் பெயரும், மோசேயின் மகனின் பெயரும் ஒன்று. அது என்ன?
Answer : எலியேசர் (ஆதியாகமம் :15:2, யாத்திராகமம் :18:4)

6. உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்த்த தேவஆட்டுக்குட்டியின் பெயரும், கொலோசெயர் சபைக்கு வாழ்த்துதல் சொன்ன யுஸ்துவின் மறுபெயரும் ஒன்று. அது என்ன?
Answer : இயேசு (மத்தேயு:1:21,கொலோசெயர்:4:11)

7. காலேப்பின் மகள் பெயரும், அகாஸ்வேரு ராஜாவின் ராஜஸ்திரியின் மறுபெயரும் ஒன்று. அது என்ன?
Answer : அத்சாள் (நியாயாதிபதிகள்:1:12, எஸ்தர்:2:7)

8. அப்சலோமின் சகோதரி பெயரும், யூதாவின் மருமகள் பெயரும் ஒன்று. அது என்ன ?
Answer : தாமார் (ஆதியாகமம் :38:6, IIசாமுவேல் :13:1)

9. தாவீதின் சிறியத்தகப்பனின் பெயரும், தாவீதின் உயிர் தோழனின் பெயரும் ஒன்று. அது என்ன?
Answer: யோனத்தான் (Iசாமுவேல் :18:1, Iநாளாகமம் :27:32)

10. தாவீதுக்கு தீர்க்கதரிசனம் உரைத்தவன் பெயரும், தாவீதின் ஒரு மகன் பெயரும் ஒன்று. அது என்ன?
Answer : நாத்தான் (IIசாமுவேல் :5:14, IIசாமுவேல் :7:17)

11. ஒரு பள்ளத்தாக்கின் பெயரும் , ஆபிரகாமுடன் யுத்தத்திற்கு சென்ற  புருஷரில் ஒருவரின் பெயரும் ஒன்று. அது என்ன?
Answer : எஸ்கோல் (ஆதியாகமம் :14:24, எண்ணாகமம் :13:23)


Comments

My popular posts

Tamil Bible Connection Game - வேதாகம பெயர்கள்! - PART III

Tamil Bible Connection Game - Bible verses (Part I)

Tamil Bible Quiz - நான் யார்?