நான் யார்? 1. மூன்றெழுத்து கொண்டவள் நான், எல்லாருக்கும் தாய் நான். கடை இரண்டில் ஆயுதம் கொண்டவள் நான். நான் யார்? Answer: ஏவாள் (ஆதியாகமம் :3:20) 2. ஐந்தெழுத்து கொண்டவன் நான், தேவனின் சிநேகிதன் நான். கடை இரண்டில் நோவாவின் மகன் பெயர் கொண்டவன் நான். நான் யார்? Answer: ஆபிரகாம் (ஆதியாகமம் :20 :1) 3. நான்கெழுத்து கொண்டவன் நான், நூறு மடங்கு அறுவடை செய்தவன் நான். முதலெழுத்து ஓர் உயிரியாம், கடை மூன்றோ பொருள் சேகரித்து வைக்க உதவுமாம். நான் யார்? Answer: ஈசாக்கு (ஆதியாகமம் :26:1) 4. மூன்றெழுத்து கொண்டவன் நான், சேஷ்ட புத்திரன் நான். கடை இரண்டு உணவு ஒன்றின் பெயராம். நான் யார்? Answer: ரூபன் (எண்ணாகமம் :16:1) 5. இரண்டெழுத்து கொண்டவன் நான். ஆசாரிய பட்டத்துக்குரியவன் நான். கடை எழுத்து ஓர் ஆங்கில எழுத்தை சுட்டி காட்டுமாம். நான் யார்? Answer: லேவி (ஆதியாகமம் :49:5) 6. ஐந்தெழுத்து கொண்டவன் நான், கோத்திர பிதாக்களில் ஒருவன் நான். கடை இரண்டில் வாகனம் பெயர் கொண்டவன் நான். நான் யார்? Answer: இசக்கார் (ஆதியாகமம் :49:14) 7. ஐந்தெழுத்து கொண்டவன் நான...
Comments
Post a Comment