Tamil Bible Quiz - வசனம் சொல்வதைச் செய்!
வசனம் சொல்வதைச் செய்! கேள்வி கேட்பவர் வசனத்தின் இருப்பிடத்தை மட்டும் கொடுக்க வேண்டும். பதில் சொல்லுபவர்கள் வசன இருப்பிடத்தில் உள்ள வசனத்தை மனதிற்குள் வாசித்தபின்பு அதில் என்னக் குறிப்பிடப்பட்டுள்ளதோ அதை நடித்துக் காண்பிக்க வேண்டும். யார் முதலில் நடித்துக் காண்பிக்கிறாரோ அவரே வெற்றியாளர். 1. எஸ்தர் 6:12 பின்பு மொர்தெகாய் ராஜாவின் அரமனைவாசலுக்குத் திரும்பிவந்தான். ஆமோனோவென்றால் சஞ்சலப்பட்டு முக்காடிட்டுக்கொண்டு தன் வீட்டுக்குத் தீவிரித்துப்போனான். Answer: முக்காடு போடவும் 2. மாற்கு 9:36 ஒரு சிறு பிள்ளையை எடுத்து, அதை அவர்கள் நடுவிலே நிறுத்தி,அதை அணைத்துக்கொண்டு. Answer : ஒரு சிறு குழந்தையை எடுத்துக் கொண்டு வந்து நடுவில் நிறுத்த வேண்டும் 3. II சாமுவேல் 6:14 தாவீது சணல்நூல் ஏபோத்தைத் தரித்துக்கொண்டு, தன் முழுப்பலத்தோடும் கர்த்தருக்கு முன்பாக நடனம் பண்ணினான்.) Answer: நடனம் பண்ண வேண்டும் 4. எண்ணாகமம் 16:4 மோசே அதைக் கேட்டபோது, முகங்குப்புற விழுந்தான். An...